உதகையில் குடிநீர் குழாய் உடைந்து லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்
பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த பின்னர், ஊழியர்கள் உடனடியாக உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்தனர்.
உதகை நகருக்கு நாள்தோறும் பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் தண்ணீர் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது. இதனையடுத்து உடைப்பு ஏற்பட்ட உடன் அருகில் இருந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் ஊழியர்கள் உடனடியாக உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்தனர்.