குடும்ப பிரச்சனையில் கம்பியால் தாக்கி ஒருவர் கொலை

இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்து, தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.

Update: 2021-09-24 13:30 GMT

பைல் படம்.

உதகை கிரீன்பீல்டு பகுதியை சேர்ந்தவர் ஜான் பால் (வயது 45) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரோஸ்லின் மேரி (33). ஜான் பாலுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால் மனைவி தனது தாய் லெசி (53) வீடான புதுமந்து சாலையில் தங்கி இருந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 2 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஜான் பால் தன் மனைவியை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக மாமியார் வீட்டுக்கு சென்றார்.

அவர் குடிபோதையில் வீட்டுக்கு குடும்பம் நடத்த வரும்படி மனைவியை அழைத்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. அப்போது ஜான் பால், ரோஸ்லின் மேரியை தாக்க முயன்றார். உடனே ரோஸ்லின் மேரியின் அக்கா குளோரா (39), அவரது கணவர் சுரேஷ், லெசி ஆகிய 3 பேர் தடுத்து இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.

படுகாயம் அடைந்த ஜான் பாலை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஊட்டி நகர மத்திய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் தகராறு செய்ததால் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது உறுதியானது.

இதையடுத்து ரோஸ்லின் மேரி, குளோரா, சுரேஷ், லெசி ஆகிய 4 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரோஸ்லின் மேரி, குளோரா, லெசி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சுரேசை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News