உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் உலா வரும் கடா மான்கள்

உதகையில் பெய்து வந்த தொடர் மழையால் வறண்டு காணப்பட்ட வனப்பகுதியில் புற்கள், தாவரவங்கள் காணப்படுவதால் மான்கள் மேய்ச்சல்.;

Update: 2021-08-05 09:36 GMT

சாலை ஓரங்களில் சுற்றி திரியும் கடா மான்கள்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் முழுவதும் பெய்த தொடர் மழையின் காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலை ஓரங்களில் பச்சைப் பசேலென்று புற்கள்,தாவரங்கள் அதிக அளவில் விளைந்துள்ளதால் வனப்பகுதியிலேயே பெரும்பாலும் காணப்படும் கடா மான்கள், குட்டிகளுடன் தற்போது சாலையோரங்களில் மேய்சலுக்கு வரத் துவங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் தொடர்ந்து மழை பெய்து வந்தது இதன் காரணமாக இங்குள்ள கல்லட்டி, அவலாஞ்சி, ஒன்பதாவது மெயில்,  தொட்ட பெட்டா உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலை ஓரங்களில் புற்கள் மற்றும் தாவரங்கள் அதிக அளவில் விளையத் துவங்கியுள்ளன. இதன் காரணமாக இவற்றை உண்பதற்காக அடர்ந்த வனப்பகுதியில் வாழ்ந்து வந்த கடாமான்கள் தற்போது சாலை ஓரங்களில் வரத் துவங்கியுள்ளன. இது இப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கும், பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Tags:    

Similar News