உதகை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி
பங்கு தந்தைகள், உதவி பங்கு தந்தைகள், பங்கு மக்கள் முன்னிலையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது;
உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டு திருப்பலி.
உதகை சேரிங்கிராசில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் 1977-ம் ஆண்டு கட்டி அர்ச்சிக்கப்பட்டது. பங்கு தந்தை ஜான் ஜோசப் தனிஷ் மூலம் மீண்டும் ஆலயம் கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. கடந்த 1-ந் தேதி முதல் புனித அந்தோணியார் ஆலயம் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. பங்கு தந்தைகள், உதவி பங்கு தந்தைகள், பங்கு மக்கள் முன்னிலையில் திருத்தலமாக உயர்த்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.