ஜெயலலிதா நினைவுநாள்: உதகை, குன்னூர் பகுதியில் அதிமுக தொண்டர்கள் அஞ்சலி
ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி உதகையில் அதிமுக மாவட்டக் கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.;
தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகையில் காபி ஹவுஸ் சந்திப்பில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில், அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், உதகை நகரச் செயலாளர் சண்முகம் மற்றும் மகளிர் அணியினர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.