உதகை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 74 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உதகை நகரில் மாவட்ட அதிமுக சார்பில், பொது மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகை, கோத்தகிரி ,குன்னூர், போன்ற இடங்களில் கொண்டாடப்பட்டது. உதகை காபி ஹவுஸ் சந்திப்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்பு ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது தொடர்ந்து மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் கே ஆர் அர்ஜுனன், மாவட்ட துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.