ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
நடப்பாண்டிற்கான ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கைக்கு வருகிற 18-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு , வருகிற 18-ந் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண், பெண் இருபாலரும் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. குன்னூரில் இயங்கும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கூடலூர் அருகே உப்பட்டியில் பழங்குடியினருக்காக செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளில் 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் சேரலாம்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு, குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 0423-2231759, பழங்குடியினர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 0426-2263449 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று நீலகிரி கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்து உள்ளார்.