உதகையில் அனைத்து கால்வாய்களையும் தூர்வாரும் பணி தீவிரம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகையில் உள்ள அனைத்து கால்வாய்களும் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2021-09-21 13:25 GMT

கால்வாய்களில் தூர்வாரும் பணி நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழையை ஒட்டி கால்வாய் ஓரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதன்படி உதகை நகராட்சியில் உள்ள கால்வாய்களில் தூய்மை பணி தொடங்கி இருக்கிறது.

மொத்தம் 36 வார்டுகளில் கால்வாய்கள் 3 கிலோ மீட்டர் தூரம், சிறிய கால்வாய்கள் 6.8 கிலோ மீட்டர் தூரம், 40 சிறு பாலங்கள் உள்ளது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மழைநீர் வடிகால்களில் படிந்து இருக்கும் மண் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது.

குறிப்பாக கிரீன் பில்டு, காந்தல் முக்கோணம், குருசடி காலனி பகுதிகளில் வெள்ளப்பெருக்கின் போது குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு அந்த கால்வாய்களை தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

Tags:    

Similar News