உதகையில் பொதுப்பணிப்பணித்துறை அமைச்சர் ஆய்வு

உதகை நகரில் சேரிங்கிராஸ் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை.

Update: 2021-12-21 12:00 GMT

சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்.

நீலகிரி மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கருவி வாகனங்கள் வரும் போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எச்சரிக்கை தகவல் ஒலிப்பெருக்கி மூலம் அளிக்கும் என்றார். பரிஷாத்த முறையில் அமைக்கப்பட்ட இந்த கருவியின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் தருணத்தில் மாநிலத்தின் அனைத்து மலைப்பகுதிக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தை இணைக்கும் மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் வாகன போக்குவரத்தால் வனவிலங்குகளுக்கும், வனவிலங்குகளால் வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும் அச்சுறுத்தலை போக்க 2.4 கி.மீ தூரம் மேம்பாலம் அமைக்கப்படும் என்றும், இது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் உதகை நகரில் சேரிங்கிராஸ் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News