உதகையில் எல்ஐசி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்
LIC பங்கு விற்பனைக்கு அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி 20 ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
எல்.ஐ.சி.யின் 5 சதவீத பங்குகளை பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு உதகை கிளை தலைவர் கோபால் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் எல்.ஐ.சி.யின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பது நாட்டு நலனுக்கு எதிரானது. எல்.ஐ.சி. சொத்தில் கட்டுமான பணிகள், நீர்ப்பாசனம், ரெயில்வே போன்றவற்றுக்கு நிதி செலவிடப்படுகிறது. தனியாருக்கு முதலீடு செய்வதன் மூலம் துறைகளுக்கு நிதி குறையும். எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. 20 ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.