நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான மறைமுக தேர்தல்

வரி விதிப்பு மேல்முறையீடு குழுவில் 4 உறுப்பினர்கள் நியமன குழு ஒப்பந்த குழு தலா ஒரு உறுப்பினர் என 6 பேர் வேட்புமனு .

Update: 2022-03-31 12:54 GMT

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடந்தது.

உதகை நகரமன்ற கூட்டரங்கில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தலைமையில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். வரி விதிப்பு மேல்முறையீடு குழுவில் 4 உறுப்பினர்கள், நியமன குழு மற்றும் ஒப்பந்த குழு தலா ஒரு உறுப்பினர் என 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஒப்பந்த குழு உறுப்பினராக முஸ்தபா, நியமன குழு உறுப்பினராக ஜார்ஜ், வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்களாக தம்பி இஸ்மாயில், நாகராஜ், கீதா, ரமேஷ் ஆகிய 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தலுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வரவில்லை.

Tags:    

Similar News