உதகையில் முக கவசம் வழங்கி சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
அனைவரும் அரசு விதித்துள்ள கொரோனா வழி நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உணர்த்துவதற்காகவே விழிப்புணர்வோடு வேட்பு மனு.
உதகையில் பொதுமக்களுக்கு முக கவசங்கள் கொடுத்தும் வேட்பு மனு தொகையான 1000 ரூபாயை நாணயங்களாக கொடுத்து வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் கவனத்தை ஈர்த்தார்.
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள் பதினோரு பேரூராட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த இருபத்தி எட்டாம் தேதி முதல் தொடங்கியது.
இந்நிலையில் உதகை நகராட்சியில் 31 வது வார்டு பகுதியில் போட்டியிட உள்ள சுயேச்சை வேட்பாளர் அசோக் குமார் என்பவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்கி வேட்பு மனு தொகையான 1000 ரூபாயை நாணயங்களாக கொண்டு வந்து வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நோய் தொற்று காலம் என்பதால் அனைவரும் அரசு விதித்துள்ள வழி நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உணர்த்துவதற்காகவே முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வோடு வேட்புமனு தாக்கல் செய்ததாக சுயேட்சை வேட்பாளர் அசோக்குமார் கூறினார்.