நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பில் முக்கிய அறிவிப்பு
கஞ்சா விற்பனை பயன்படுத்துவோர் பற்றிய தகவல்கள் தெரிவிப்போரின் தகவல் ரகசியமாக பாதுகாக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்;
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0 கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை தனிப்படை அமைத்து கண்காணித்து கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டத்தில் 28.03.2022 முதல் 30.03.2022 வரை தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
12 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து, 13 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. நீலகிரி மாவட்ட பொதுமக்கள் தங்களது பகுதிகளில் யாரேனும் கஞ்சா விற்பனை செய்தாலோ அல்லது கஞ்சா பயன்படுத்தினாலோ காவல் கண்காணிப்பாளர் கைபேசி எண் 9789800100 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரம் ரகசியமாக காக்கப்படும் என நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தெரிவித்து உள்ளார்.