'கண்டிப்பா ஓட்டு போடுங்க' போஸ்டர் ஒட்டி விழிப்புணர்வு
நீலகிரி மாவட்டநிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் "கறை நல்லது " என்ற விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
உதகையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டம் உதகையில் தேர்தல் ஏற்பட்டு பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் அதிகாரிகள் சோதனை சாவடிகளில் வாகன சோதனைகள் செய்து வருகின்றனர். கேரள எல்லையான கூடலூரில் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலில் ஒட்டு போடுவதில் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் போஸ்டர் மூலமாக ஒட்டு போடுவதின் அவசியத்தை வலியுறுத்தி ' கறை நல்லது' என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. ஒட்டு போட்ட பின்னர் வைக்கப்படும் ' மை ' குறித்த விளக்கத்தை விழிப்புணர்வு வாசகமாக பதிவிட்டுள்ளனர்.