உதகை நகராட்சி அலுவலகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை
வேட்புமனுக்கள் பெறும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ள அறைகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளின் கவுன்சிலர் பதவிகளுக்கு 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தற்போது வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. 4-ந் தேதி கடைசி நாள் என்பதால், அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா பரவலை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேட்புமனுக்கள் பெறும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ள அறைகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. வேட்பாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தரையில் குறியீடு ஒட்டப்பட்டு உள்ளது. வேட்பாளர்கள் வந்து செல்லும் இடங்கள், அலுவலக பகுதியில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.