உதகையில் சிஐடியூ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

உதகையில் சிஐடியூ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-04 13:44 GMT

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர்.

நீலகிரி போக்குவரத்து கழக மண்டல சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உதகை மத்திய பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு நீலகிரி மண்டல துணை செயலாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.

துணைப் பொதுச்செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து கடந்த 2003-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

வேலைப்பளுவை திணிக்கக்கூடாது. அனைத்து பணிமனைகளுக்கும் தேவையான உதிரிபாகங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

உண்ணாவிரத போராட்டத்தில் நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News