உதகையில் குதிரை பந்தயம்: ஏராளமானோர் கண்டு ரசித்தனர்
நீலகிரியில் ஆண் குதிரைகள் மட்டும் பங்கேற்ற குதிரை பந்தயம் இன்று நடைபெற்றது;
மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் ஆண் குதிரைகள் மட்டும் பங்கேற்ற நீலகிரி 2000 கினீஸ் கோப்பைக்கான குதிரைப் பந்தயம் நடைபெற்றது. கலந்துகொண்ட குதிரைகள் வெற்றி இலக்கை நோக்கி பாய்ந்தன இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரியில் கோடை சீசன் துவங்கியுள்ளது ஒவ்வொரு கோடை சீசன் போதும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரைப் பந்தயங்கள் நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி குதிரை பந்தயம் துவங்கியது தொடர்ந்து ஒவ்வொரு கோப்பைக்கான குதிரைப் பந்தயங்கள் நடந்து வரும் நிலையில் இன்று நீலகிரி 2000 கைனீஸ் என்ற கோப்பைக்கான ஆண் குதிரைகள் மட்டும் பங்கேற்ற குதிரை பந்தயம் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் வெற்றிபெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு நீலகிரி 2000 கினீஸ் கோப்பையும் குதிரை வீரர்களுக்கு நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டன. இன்று நடைபெற்ற இந்த குதிரை பந்தயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் குதிரைப் பந்தயத்தை கண்டு ரசித்தனர்.