உதகையில் கனமழை சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
இந்த மழை உதகை,குன்னூர்,கோத்தகிரி நகரப் பகுதிகளிலும், புற நகர்பகுதியிலும் தொடர்ந்து பெய்தது.
நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று மதியம் பரவலாக மழைப் பெய்தது. இன்று காலை வரை அதிக பட்சமாக பந்தலூரில் 135 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக கல்லட்டி மற்றும் கெத்தையில் 3 மி.மீட்டரும், மலைப் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் சராசரியாக 484.1 மி.மீட்டரும் சராசரியாக 16.69 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை,குன்னூர், கோத்தகிரியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகை,குன்னூர், கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மதிய நேரங்களில் அவ்வப்போது மேக மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வந்தது.
இந்த மழை உதகை,குன்னூர்,கோத்தகிரி நகரப் பகுதிகளிலும், புற நகர்பகுதியிலும் தொடர்ந்து பெய்தது.
இந்த பரலான மழைக் காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது.