உதகையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை
உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் மக்கள் அவதியுற்றனர்.;
கனமழையால் சாலைகளில் தேங்கிநிற்கும் தண்ணீர்.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து உதகை நகரில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டு வந்த நிலையில், மாலை லேசான சாரல் மழை பெய்ய துவங்கிய நிலையில், இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.