கனமழையால் ஊறிப்போன மண் திட்டுகள் மீண்டும் சரிவு
இதனால் அப்பகுதியில் 3 வீடுகள் அந்தரத்தில் தொங்கும் அபாயம் உள்ளது. மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
உதகையில் கனமழை பெய்ததால் மண் ஈரப்பதமாக உள்ளது. தண்ணீரில் ஊறிப் போனதால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. உதகை லவ்டேல் அருகே அன்பு அண்ணா காலனியில் வீடுகளை ஒட்டி இருந்த தடுப்புச்சுவர் இடிந்து அருகே இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதனால் மண் சரிவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அங்கு 3 வீடுகள் அந்தரத்தில் தொங்கும் அபாயம் உள்ளது. மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.