உதகை ,கோத்தகிரியில் கனமழை
உதகை மற்றும் கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.;
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
உதகை மற்றும் கோத்தகிரியில் பெய்த கனமழையால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
நீலகிரி மாவட்டம் உதகை நகரில், இன்று காலையில் இருந்தே வெயில் அதிகம் காணப்பட்டது. அதன் பின்னர் வானம் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை காணப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, திடீரென உதகையில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் கரை புரண்டு ஓடியது. உதகை நகரில் சேரிங் கிராஸ், மத்திய பேருந்து நிலையம், அரசு தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, கல்லட்டி, காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதேபோல், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கனமழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. எனினும் பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.