உதகையில் பெய்து வரும் மழையால் கடுங்குளிர் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. பொதுமக்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-06-14 07:08 GMT

நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கும். இதன் ஒரு பகுதியாக தற்போது, காற்றுடன் கூடிய மழை, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வருகிறது.

உதகை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவில் இருந்து தற்போது வரை காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருவதால் கடுமையான குளிர் நிலவி வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மழையுடன் கூடிய கடும் குளிர் நிலவி வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News