உதகையில் இரவிலிருந்து கனமழை கொட்டி வருகிறது: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று இரவிலிருந்து உதகையில் கனமழை பெய்து வருகிறது

Update: 2021-09-06 01:35 GMT

தொடர் மழை பெய்து வருவதால் கையில் குடையுடன், ஸ்வட்டெர் அணிந்து வேலைக்கு செல்லும் பெண்கள்.

நீலகிரி :

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவிலிருந்து பெய்து வரும் மழையால் கடுங்குளிர் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைத்துள்ளது.

நீலகிரியில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இந்நிலையில் இரவில் தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது.

உதகை நகரில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா , மத்திய பேருந்து நிலையம் சேரிங் கிராஸ் ,தலைகுந்தா, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இந்த மழையால் கடும் குளிர் நிலவுகிறது. பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலருக்கும் இயல்பு வாழ்க்கை பெரிது பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News