நீலகிரியில் படுகரின மக்களின் அறுவடை திருவிழா

ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பு பூஜை நடத்தி, காணிக்கை செலுத்தி, விதைப்பு திருவிழா கொண்டாடுவதாக படுகரின மக்கள் கூறினர்.;

Update: 2022-03-14 13:30 GMT

உதகை அருகே கீழ் அப்புக்கோடு கிராமத்தில் விதைப்பு திருவிழா நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில்,  அட்டி என்று அழைக்கப்படும் கிராமங்களில் படுகர் இன மக்கள் வாழ்கின்றனர். மேற்குநாடு சீமை, பொறங்காடு சீமை, குந்தா சீமை, தொதநாடு சீமை ஆகிய 4 சீமைகள் உள்ளன. படுகர் இன மக்கள் அறுவடை, விதைப்பு திருவிழா, ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

உதகை அருகே கீழ் அப்புக்கோடு கிராமத்தில் விதைப்பு திருவிழா நடந்தது. மேற்குநாடு சீமையில் உள்ள மேலூர், கல்லக்கொரை, பி பாலகொலா, ஓசஹட்டி உள்ளிட்ட 33 கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்கள் கலந்துகொண்டனர். விதைப்பு திருவிழாவை முன்னிட்டு கோவிலில் காய்கறி விதைகளை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடினர். அதனை தொடர்ந்து விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, படுகர் இன மக்களின் மேற்குநாடு சீமை சார்பில், ஆண்டுக்கு ஒருமுறை முறைப்படி சிறப்பு பூஜை நடத்தி காணிக்கை செலுத்தி விதைப்பு திருவிழா கொண்டாடுகிறோம். விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைக்க பூஜை செய்தோம் என்றனர்.

Tags:    

Similar News