கவர்னர் வருகை: உதகை சாலைகள் தூய்மை பணி தீவிரம்
உதகை-கோத்தகிரி சாலை கோடப்பமந்து உள்ளிட்ட இடங்களில் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.;
உதகைக்கு நாளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தருகிறார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றி விட்டு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கோவைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக உதகை ராஜ்பவனுக்கு கவர்னர் வருகிறார். இதனால் உதகையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கவர்னர் வருகையையொட்டி, உதகை நகராட்சி மூலம் தூய்மைப் பணியாளர்கள் தாவரவியல் பூங்கா முன்புறம், ஆட்லி சாலை, உதகை-கோத்தகிரி சாலை கோடப்பமந்து உள்ளிட்ட இடங்களில் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.