உதகையில் பூ வியாபாரிக்கு வந்த பார்சலில் தங்க வண்டு?
உதகையில் பூ வியாபாரிக்கு வந்த பூ பார்சலில் இருந்த தங்க நிற வண்டை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.;
பூ பார்சலில் வந்த தங்க நிற வண்டு.
உதகை நகரில் பஷீர் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் நாள்தோறும் மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லி, கதம்பம், அரளி, துளசி உள்ளிட்ட பூ வகைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் எப்போதும் போல் பூ பார்சல் வந்தவுடன் அதைப் பிரித்து பார்த்தபோது தங்க நிறத்தில் காகிதம் போல் தென்பட்டதை கண்ட அவர் சற்று நேரம் உற்றுப் பார்த்தபோது தங்க நிறமாக கண்ட உருவம் நகர்ந்தது. உடனே அதை எடுத்துப் பார்த்தபோது சிறு வண்டுபோல் இருந்துள்ளது. உடல் முழுவதும் தகதகவென மின்னும் தங்கத்தை போல் இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்த அவர்கள் இதுவரை இதுபோல் பூச்சியை கண்டதில்லை என ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்.