உதகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசு

உதகை கேத்தி பேரூராட்சியில் நடந்த தடுப்பூசி முகாமில் 18 வயதுடையவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.;

Update: 2021-10-12 08:00 GMT

மரக்கன்றுகளை பரிசாக வழங்கிய கேத்தி செயல் அலுவலர் நடராஜ்.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகை கேத்தி பேரூராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 18 வயதுடையவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதற்காக கேத்தி செயல் அலுவலர் நடராஜ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசும், மரக்கன்றுகளையும் கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தார்.

Tags:    

Similar News