சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: உதகையில் 185 டன் குப்பை அகற்றம்

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகையில் குப்பைகள் அதிகமாக சேகரமாகி உள்ளது என்றனர்.

Update: 2021-10-19 10:06 GMT

உதகையில் 185 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. 

உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொடர் விடுமுறையை ஒட்டி 4 நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். வழக்கமாக உதகையில் தினமும் 30 டன் குப்பை சேகரமாகும். லாரி மூலம் குப்பைகளை அப்புறபடுத்தப்பட்டு வருகின்றன. வார்டு வாரியாக பணியாளர்கள் வாகனங்களில் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். 

இதற்கிடையே, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், குப்பை அதிகரித்தது. உதகை நகராட்சி மார்க்கெட்டில் சேகரமான குப்பைகள் அகற்றப்படாமல், காய்கறி, பழக்கழிவுகள் அப்படியே குவிந்து கிடந்தன. இதனால் தூர்நாற்றம் வீசியதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மார்க்கெட்டில் குவிந்து கிடந்த குப்பைகள் பொக்லைன் எந்திரம் மூலம் நகராட்சி லாரியில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, உதகை நகராட்சியில்,  கடந்த 5 நாட்களில் மொத்தம் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 420 கிலோ (185 டன்) குப்பை சேகரமானது. அவற்றை பணியாளர்கள் அகற்றி தீட்டுக்கல் குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று கொட்டினர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகையில் குப்பைகள் அதிகமாக சேகரமாகி உள்ளது என்றனர்.

Tags:    

Similar News