உதகையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

18 வயதுக்குட்பட்ட அனைத்து வகையான மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-01 12:28 GMT

நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 2021-2022-ம் கல்வியாண்டில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் கீழ்க்குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

முகாமில் அரசு டாக்டர்கள், வல்லுனர்கள் பங்கேற்று மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு தேவைப்படும் உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை பரிந்துரை செய்ய உள்ளனர்.

உதகை வட்டாரத்தில் வரும் 8.03.2022 அன்று உதகை அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னூர் வட்டாரத்தில் 9.03.2022 அன்று சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளி, கோத்தகிரி வட்டாரத்தில் 10.03.2022 அன்று கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி, கூடலூர் வட்டாரத்தில் 11.03.2022 வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது..

மாவட்ட மறுவாழ்வு அலுவலரால் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. எனவே, முகாமுக்கு 18 வயதுக்குட்பட்ட அனைத்து வகையான மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News