உதகை வன அலுவலகம் முன்பு வனத்துறையினர் ஆர்ப்பாட்டம்

வால்பாறையில் பொய் வழக்குபதிவு செய்து வனச்சரகரை கைது செய்தததை கண்டித்து வனத்துறையினர் சார்பில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Update: 2021-09-25 09:04 GMT

தமிழ்நாடு வன ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் மாவட்ட வன அலுவலகம் முன்பு சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சிருகுன்றா வனப்பகுதியில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளை, வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் தவறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வால்பாறை போலீசார் வால்பாறை வனச்சரகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து அவர் பொள்ளாச்சி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து வனச்சரகர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டதாக கூறி நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என தமிழ்நாடு வன ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் மாவட்ட வன அலுவலகம் முன்பு சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வால்பாறை வனச்சரகர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை உடனடியாக வாபஸ் பெறுமாறும் அவரை சிறையிலிருந்து விடுவித்து பணியில் அமர்த்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மேலும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வனத்துறை ஓய்வு விடுதிகளில் சுற்றுலா பயணிகளை தங்க அனுமதிப்பதை தவிர்க்க வேண்டுமென நீலகிரி மாவட்ட வனச்சரக சங்கத்தின் தலைவர் கணேசன் தெரிவித்தார்.

Tags:    

Similar News