உதகை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதி தடையை நீக்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வனப்பகுதிகளில் கால்நடைகள் மேய்க்க தடை விதித்ததுடன், அது சட்ட விரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினால் வனப்பகுதிகளில் வாழ்ந்துவரும் மலைவாழ் மக்கள் பழங்குடியினர் மற்றும் வனத்துறை சார்ந்த வாழ்ந்து வருகின்ற பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தீர்ப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, உதகை ஆட்சியர் அலுவலகம் அருகே, விவசாயிகள் சங்கம் மற்றும் பழங்குடியினர், இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திடீரென தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக, பாடல்கள் மூலம் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலையில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டதால், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் சம்பவ பகுதிக்கு வந்து போராட்டம் நடத்தியவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர் இதனால் மூன்று மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்ற போராட்டமானது கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் உதகையில் பரபரப்பு ஏற்பட்டது.