உதகையில் ஆண்களுக்கான இலவச குடும்பநல அறுவை சிகிச்சை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களின் அரசு மருத்துவமனைகளில், ஆண்களுக்கான இலவச குடும்ப நல அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.;

Update: 2021-11-20 10:54 GMT

நீலகிரி மாவட்டத்தில் 21.11.21 (ஞாயிற்றுக்கிழமை) முதல், டிசம்பர் 4-ந் தேதி வரை ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை இருவார விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெறும்.

இலவசமாக செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு,  அரசின் சார்பில் ரூ.1,100 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தகுதி உள்ள அனைத்து ஆண்களும் நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்டு பயன்பெறலாம். 0423-2443954 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் ஹிரியன் ரவிக்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News