தேர்தல் பணிக்கு முன்னாள் இராணுவத்தினர் அழைப்பு

வரும் ஏப்-6 ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பணிபுரிய முன்னாள் இராணுவ வீரர்களுக்கு நீலகிரி எஸ்.பி அழைப்பு.

Update: 2021-03-21 07:19 GMT

பல ஆண்டு காலம் நம் நாட்டிற்காக தேசத்தின் பல்வேறு இடங்களில் பணிசெய்து பெருமையுடன் திகழும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கு மீண்டும் நம் நாட்டிற்காக சேவை செய்வதற்கு ஒரு வாய்ப்பாக தமிழகத்தில் 06.04.2021அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நீலகிரி மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு அனைவரும் முன்வர நீலகிரி மாவட்ட காவல்துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அழைப்பில் கூறியிருப்பதாவது, இதுவரை தமிழகத்தில் நடந்த தேர்தல்கள் அனைத்திலும் தங்களது பங்களிப்பால் சிறப்பாகவும் அமைதியான முறையிலும் நடைபெற்றன. அதேபோல் இந்த ஆண்டும் அமைதியான முறையிலும் பாதுகாப்பாகவும் தேர்தல் நடைபெற தங்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தேர்தலில் பணி செய்பவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படுவதுடன் மேலும் அவர்கள் தேர்தலில் தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும். எனவே விருப்பமுள்ள முன்னாள் இராணுவ வீரர்கள் நீலகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை 0423 2223055 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு இதன் மூலம் அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News