நீலகிரியில் தேர்தல் புதிய பார்வையாளர் நியமனம்
மாவட்டத்தில் 15 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 41 உதவி தேர்தல்நடத்தும் அலுவலர்கள்உள்ளனர். தற்போதுபுதிய பார்வையாளர்நியமனம்
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 294 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.
தேர்தலில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 430 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 244 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தினர் 7 பேர் என மொத்தம் 3 லட்சத்து 18 ஆயிரத்து 681 பேர் வாக்களிக்க உள்ளனர்.
409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கு 3 பறக்கும் படைகள் வீதம் மொத்தம் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.9 லட்சத்து 87 ஆயிரத்து 150 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
15 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 41 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். 15 உள்ளாட்சி அமைப்புகளிலும் துணை ஆட்சியர் நிலையில் தலா ஒருவர் வீதம் 15 உள்ளூர் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 6 அலுவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்துக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளராக சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.