உதகையில் மகளிர் வரைந்த ஓவிய கண்காட்சி: பார்வையாளர்கள் வியந்து ரசிப்பு
உலக மகளிர் தினத்தை போற்றும் வகையில் உதகையில் துவங்கிய புகைப்படக் கண்காட்சி தொடங்கியுள்ளது.;
மகளிர் வரைந்த ஓவியங்களை பார்வையிடும் பார்வையாளர்கள்.
உலக மகளிர் தினத்தை போற்றும் வகையில், உதகையில் பெண்கள் மட்டுமே வரைந்த புகைப்படங்களை கொண்ட ஓவியக் கண்காட்சி தொடங்கி உள்ளது. சோலோ ஆர்ட் கேலரி பகுதியில் தொடங்கிய புகைப்பட கண்காட்சி, 20 நாட்கள் நடைபெறும்.
இந்த புகைப்பட கண்காட்சியில் நீலகிரி, பஞ்சாப், பம்பாய், புனோ உள்ளிட்ட இடங்களில் இருந்து பெண்கள் மட்டுமே வரைந்த புகைப்படங்கள் காட்சியில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக விநாயகர், சிறுகுழந்தை, வயதான பெண்மணியின் புகைப்படம், இயற்கை காட்சிகள் பூக்கள் உள்ளிட்ட ஏராளமான படங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது, ஆயில் பெயிண்டிங், வாட்டர் பெயிண்டிங், பென்சில் பெயிண்டிங் உள்ளிட்டவற்றில் படங்கள் வரையப் பட்டுள்ளன. இந்த புகைப்பட கண்காட்சியை, சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகள் உள்ளூர் பொதுமக்கள் என அனைவரும் கண்டு ரசித்து வருகின்றனர்.