உதகை 31 வது வார்டில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
உதகை 31 வந்து வார்டில் நாள்தோறும் ஆறு போல் சாலையில் செல்லும் கழிவுநீரால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.;
உதகை 31 வது வார்டில் நாள்தோறும் சாலையில் செல்லும் கழிவு நீரால் பொது மக்களுக்கு நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் இந்தப் பகுதியிலிருந்து பணிக்கு செல்லும் பொதுமக்களும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் நூற்றுக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இன்டர்லாக் பதித்த சாலையில், கழிவுநீர் ஆறுபோல் செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாலையில் செல்லும் கழிவுநீரை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.