உதகையில் கடாமானின் தலையை தூக்கிச்சென்ற நாய்

ஊட்டியில், இறந்த கடமானின் தலை பகுதியை நாய் கவ்விச் சென்றது. வனவிலங்குகளின் பாதுகாப்பை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டுமென்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2021-06-21 03:24 GMT

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து, கூடலூர் செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் கடாமான் ஒன்றின் தலையை நாயொன்று கவ்விச் சென்று கொண்டிருந்தது. இதை வாகனத்தில் சென்ற சிலர் படம் பிடித்துள்ளார். இந்த நிகழ்வை பார்த்து வன விலங்கு ஆரவலர்கள் திகைத்தனர். 

வனப்பகுதியை ஒட்டிய சாலையில் ஏரி அமைந்துள்ளதால் அதிகமாக செந்நாய்கள் நீர்நிலைகளில் நீர் அருந்த வருவதுண்டு. அப்போது, கடாமானை அவை வேட்டையாடி இருக்கலாம்; அல்லது, மர்ம நபர்களால் யாரேனும் மானை வேட்டையாடி, அதில் எஞ்சிய தலையை நாய் கவ்வி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

எதுவானாலும், வன விலங்குகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், இந்த பகுதியில் வன ஊழியர்கள் சரியான முறையில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News