உதகையில் 10 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தொட்டபெட்டா மலை சிகரம்

நீலகிரியில் கோடை விழாவிற்கான அறிவிப்பு வெளியான நிலையில் தொட்டபெட்டா மலை சிகரம் திறக்கப்பட்டது.

Update: 2022-03-27 05:15 GMT

பைல் படம்.

கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஓர் அரங்கில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் சுற்றுலாத் தலங்களை திறக்க தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்கள், படகு இல்லங்கள் அரசு விதித்த வழி நெறிமுறைகளின்படி திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உதகையில் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் தொட்டபெட்டா மலைச் சிகரம் செல்லும் சாலை மழையினால் சேதமடைந்த காரணத்தினால் சீரமைக்கும் பணி கடந்த நான்கு மாதங்களாக நடந்து வந்தது. இதனால் தொட்டபெட்டா மலைச் சிகரம் திறக்கப்படாமல் இருந்தது.

உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை கண்டு வரும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா மலை சிகரம் வரை வந்து தொட்டபெட்டா மலைச் சிகரம் திறக்கப்படாமல் இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று வந்தனர்.

இந்நிலையில் சாலை பணிகள் முடிந்த அதன் காரணமாக தொட்டபெட்டா மலைச் சிகரத்தை இன்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் அனைவரும் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகமானது கோடை விழா குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் 10 மாதங்களாக திறக்கப்படாமலிருந்த தொட்டபெட்டா மலைச் சிகரம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி உள்ளூர் மக்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீலகிரியில் கோடை விழா எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தமுறை கோடை விழா நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News