16 ம்தேதிவரை நீலகிரி செல்ல வேண்டாம் : அறிவிப்பையடுத்து வெறிச் சோடிய பூங்கா
நீலகிரிக்கு 16ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு வந்ததையடுத்து சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் வெறிச்சோடி காணப்பட்டது.;
16ம் தேதி வரை நீலகிரி பயணத்தை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு அறிவித்துள்ள நிலையில் விடுமுறை நாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் உதகை அரசு தாவரவியல் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 16 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது மழையின் காரணமாக நிலச்சரிவு அபாயம் உள்ளதால் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியிருந்த நிலையில் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து அனைத்து சுற்றுலாத் தலங்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
குறிப்பாக இரண்டாம் கட்ட சீசனில் மாவட்டத்திற்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில் விடுமுறை நாளான இன்று அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடியது குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில் இன்று சுற்றுலா பயணிகள் யாரும் வருகை புரியாததால் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.
கனமழை எதிரொலியால் 16ம் தேதி வரை நீலகிரிக்கு வருவதை தவிர்க்க அறிவிப்பு வெளியான நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி காணப்பட்டதால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.