உதகை நகர் மன்றத் தலைவராக திமுகவின் வாணீஸ்வரி பொறுப்பேற்பு

உதகை நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட வாணீஸ்வரிக்கு கவுன்சிலர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.;

Update: 2022-03-04 06:09 GMT

உதகை நகர்மன்றத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட வாணீஸ்வரி.

நீலகிரி மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவியேற்றுள்ள நிலையில் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் பதினோரு பேரூராட்சிகளில் நகர மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது.

உதகை நகராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த வாணீஸ்வரி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு நகர மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுற்றுலா நகரமான உதகையில் உள்ளூர் மக்கள் மட்டுமன்றி சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்தபடுமெனவும், பசுமையை காக்கும் வகையில் நகரின் பல பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

பதவி ஏற்றுக்கொண்ட உதகை நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட நகர மன்றத் தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News