நீலகிரி சிவசேனா கட்சியினர் சார்பில் விநாயகர் சிலை கரைப்பு
உதகை சிவசேனா கட்சி சார்பில் வைக்கப்பட்ட 6 அடி விநாயகர் சிலை காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்பட்டது.
உதகையில் சிவசேனா கட்சி சார்பில் நடந்த விநாயகர் விசர்ஜனம் 6 அடி விநாயகர் சிலை நீர்நிலையில் கரைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் சிவசேனா சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். கடந்த 10 ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி கோலகலமாக கொண்டாடப்பட்டது.
சிவசேனா கட்சி சார்பில் இந்த முறை 34 ம் ஆண்டான இந்த வருடமும் அரசு விதித்துள்ள கொரோனா வழி நெறிமுறைகளை கடைப்பிடித்து முன்னதாக காந்தன் துளசி மாடம் சிவன் கோயிலில் விநாயகர் சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டு உதகை அருகே உள்ள காமராஜர் அணைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நீர்நிலையில் விநாயகருக்கு பக்தி கோஷங்கள் எழுப்பி நீர்நிலையில் விநாயகர் சிலை விடப்பட்டது.
இந்த சிலை கரைப்பு நிகழ்ச்சியில் சிவசேனா கட்சியின் நீலகிரி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட துணை தலைவர் கே சி சுரேஷ் குமார், மாவட்ட துணை தலைவர் சங்கர், மற்றும் நகர செயலாளர் சுதாகர், நகர இளைஞரணி பொறுப்பாளர் தரணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.