ஊட்டியில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்பிவைப்பு

ஊட்டியில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்பிவைக்கும் பணிகள் இன்று நடைபெற்றது.

Update: 2022-02-17 11:50 GMT

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 291 இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த மருத்துவ பொருட்கள் ஊட்டி பிரிக்ஸ் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது.

நகராட்சிகள், பேரூராட்சிகள் வாரியாக 406 வாக்குச்சாவடிகளுக்கு மருத்துவ பொருட்கள் தனித்தனியாக அடுக்கி வைக்கப்பட்டது.

இன்று சுகாதாரத்துறை மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மருத்துவ பொருட்கள் அனுப்பும் பணி நடைபெற்றது.

ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் இருந்து 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளுக்கு அந்தந்த வாகனங்கள் மூலம் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

ஒரு வாக்குச்சாவடியில் தெர்மல் ஸ்கேனர், 500 மில்லி லிட்டர் கிருமிநாசினி 6 பாட்டில்கள், முககவசம், முகமூடி, ரப்பர் கையுறை, வாக்காளர்களுக்கு கையுறை, குப்பை வாளி, முழு பாதுகாப்பு கவச உடை உள்பட 12 மருத்துவ பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

15 உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மருத்துவ பொருட்கள் வாக்குச்சாவடி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது. 

Tags:    

Similar News