நீலகிரி என்சிசி மாணவர்களை பார்வையிட்ட தமிழக பொது துணை இயக்குனர்

கோவை மண்டலத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 31 தமிழ்நாடு தனி அணி தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது.

Update: 2021-09-15 07:22 GMT
நீலகிரி மாவட்ட என்சிசி மாணவர்கள் அணிவகுப்பு.

கோவை மண்டலத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 31 தமிழ்நாடு தனி அணி என்.சி.சி.(தேசிய மாணவர் படை) செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் 12 பள்ளிகள், 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 700 பேர் ராணுவ பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து என்.சி.சி. தமிழக பொது துணை இயக்குனர் (டி.டி.ஜி.) கே.குக்ரேத்தி உதகையில் உள்ள என்.சி.சி. அலுவலகத்துக்கு இன்று வந்தார்.

அவருக்கு என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இதனை அவர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் என்.சி.சி. மாணவர்களின் செயல்பாடு மற்றும் அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பொது துணை இயக்குனர் கே.குக்ரேத்தி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் ராணுவத்தில் உயர் பதவிகளை பெற கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இதனால் திறன்களை அதிகம் வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையான பயிற்சிகளை தர அரசின் உதவியோடு என்.சி.சி. தயாராக உள்ளது. டெல்லியில் ஆண்டுதோறும் நடக்கும் அணிவகுப்பில் பங்கேற்க நல்ல பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும் நீலகிரியில் என்.சி.சி. மாணவர்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக பாராட்டினார். முன்னதாக என்.சி.சி. கமாண்டர் கர்னல் சீனிவாசன் வரவேற்றார். ஆய்வின்போது என்.சி.சி. அலுவலர்கள் சுப்ரமணியன், விஜய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News