உதகையில் இந்து முன்ணனி சார்பில் ஆர்ப்பாட்டம்

உதகை ஏடிசி திடலில் இந்து முன்ணனி சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-10-26 13:15 GMT
இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

தமிழக கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட கோரி இந்து முன்னணி சார்பில் உதகை ஏ.டி.சி. திடலில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்க நகைகளை உருக்க கூடாது. அறநிலையத் துறையிடம் இருந்து கோவில்களை மீட்க வேண்டும். தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட்டு கோவில்களை காக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

மேலும் கொட்டும் மழையில் பதாகைகளை ஏந்தி இந்து முன்ணனியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News