உதகையில் மீண்டும் ஆபத்தான லாரிப்பயணம்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
உதகையில் ஆபத்தான முறையில் தாெழிலார்களை ஏற்றிச்செல்லும் லாரி உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக கேரட் தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்களை பணிக்கு அழைத்துச் செல்வோர் அறுவடை செய்யப்பட்ட மூட்டைகளின் மீது ஆட்டு மந்தைகளைப் போல் அமரவைத்து செல்வது தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்களை அமரவைத்து செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மீண்டும் நகரப்பகுதிகளில் கேரட் மூட்டைகள் மீது ஆட்களை ஏற்றிச் செல்வது அதிகரித்துள்ளது. ஏற்கனவே இதுபோல் ஆட்களை ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி உயிரிழப்பும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
எனவே இதுபோன்ற லாரிகளில் ஆட்களை அதிகமாக ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.