உதகையில் பா.ஜ.க நிர்வாகி கொரோனா நிதி வழங்கினார்
உதகை சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நீலகிரி ஆட்சியரிடம் 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்;
ஊட்டியில் கொரோனா நிதியை கலெக்டர் இன்னொசென்ட் சிவாவிடம் வழங்கும் பா.ஜ.க. நிர்வாகி போஜராஜன் வழங்கினார்.
உதகை சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட போஜராஜன் கொரோனா நிவாரண நிதியாக ஒரு லட்சத்திற்கான காசோலையை நீலகிரி ஆட்சியரிடம் வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனோ நிவாரண நிதியாக பல தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திடம் ரொக்கம் மற்றும் காசோலைகளை வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட போஜராஜன் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதில் நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ், பொருளாளர் தர்மன், நகரச் செயலாளர் சுரேஷ், ஆகியோர் உடன் இருந்தனர்.