நீலகிரியில் 50ஆயிரம் பேருக்கு கொரோன தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 50ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கேரளாவில் வேகமாககொரோனா தொற்று பரவிவருவதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் தொற்று பரவாமலிருக்க மருத்துவ துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 3லட்சத்து 62 ஆயிரத்து 126 பேருக்கு கொரோனா சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது . பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனர்.
இதனால் கொரோனா தொற்றில் இருந்து சிகிச்சைபெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 360 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைபெற்று வருவோர் எண்ணிக்கை 72 ஆக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் 50 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 482 ஆக உள்ளது. மேலும் மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள், இணை நோயாளிகள் , பொது மக்கள் என பல்வேறு நபர்களுக்கு இதுவரை 50 ஆயிரத்து 180 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொற்று பாதிப்பு அதிகரிப்பதால் நீலகிரியில் கொரோனா மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள்முறையாக கொரோனா வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என மருத்துவ துறை துணை இயக்குநர் பாலுசாமி தெரிவித்துள்ளார்.