உதகை மாவட்ட திமுக அலுவலகத்தில் படுத்து போராட்டம் நடத்திய கவுன்சிலர்

கீழ்குந்தா பேரூராட்சி செயலாளர் பாபுவை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்திய கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-03-04 13:51 GMT

தி.மு.க. அலுவலகத்தில் கணவருடன் நாகம்மாள் தரையில் படுத்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சியில் தலைவர் வேட்பாளராக 15-வார்டு கவுன்சிலர் நாகம்மாளை தி.மு.க. தலைமை அறிவித்தது. அவரை எதிர்த்து 2-வார்டு கவுன்சிலர் (சுயேச்சை) சத்தியவாணி வேட்புமனு தாக்கல் செய்தார்.

வாக்கெடுப்பில் சத்தியவாணி 9 வாக்குகள், நாகம்மாள் 6 வாக்குகள் பெற்றனர். புதிதாக தேர்வான பேரூராட்சி தலைவர் சத்தியவாணி பதவியேற்றார். தி.மு.க. அறிவித்த தலைவர் வேட்பாளர் நாகம்மாளை தி.மு.க.வினரே சதி செய்து தோல்வி அடைய செய்ததாக நீலகிரி மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கணவருடன் நாகம்மாள் தரையில் படுத்து கிடந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மாவட்ட செயலாளர் முபாரக் சதி செய்ததால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என அவரை கண்டித்தும், கீழ்குந்தா பேரூராட்சி செயலாளர் பாபுவை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News