கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்

நீலகிரியில் ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா தொற்று தற்போது இரட்டை இலக்கில் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்;

Update: 2021-03-24 06:06 GMT

நீலகிரி மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றை தடுக்கும் பொருட்டு தடுப்பு ஊசி போடுவது அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர் இன்ன சென்ட் திவ்யா கூறினார்.

உதகையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் தாக்கம் குறித்து மாவட்ட மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதையடுத்து நேற்று ஒரே நாளில் 3700 பேர் தாமாக முன் வந்து தடுப்பு ஊசி போட்டுள்ளதாக கூறினார். இதுவரை ஒற்றை இலக்கில் இருந்த கோவிட் 19 தொற்று தற்போது கடந்த இரட்டை இலக்காக அதிகரித்துள்ளதையடுத்து. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, 70 கண்காணிப்பு குழுக்கள் மூலம் முகக் கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக கூறினார். கோடை காலம் துவங்கியதையடுத்து கேரளா, கர்நாடக மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதால் முகக் கவசம் அணிவது, e- பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறினார்.

Tags:    

Similar News