நீலகிரியில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

நீலகிரியில், முதல் மற்றும் 2ம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-06-29 15:55 GMT

நீலகிரி மாவட்டத்தில் 30, 6, 2021 அன்று நகராட்சி ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களில் முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவீஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி உதகையில் காந்தல் ஓம் பிரகாஷ் நடுநிலைப்பள்ளியில் 300 டோஸ்களும், கூடலூரில் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் 300 டோஸ்களும், கோத்தகிரி ஊராட்சி சமுதாயக்கூடம் நெடுகுளாவில் 300 டோஸ்கள், குன்னூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி காந்திபுரத்தில் 300 டோஸ்களும் செலுத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள நகராட்சி,  ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களில், முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் தடுப்பூசி மையங்களில் டோக்கன் எதுவும் வழங்கப்படாது எனவே பொதுமக்கள் தடுப்பூசி மையங்களுக்கு வருகை புரிவது தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோக்கன்கள் அனைத்தும் அவரவர் இல்லங்களில் நேரடியாக விநியோகிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News